“பெரியார் வலைக்காட்சி” நடத்தும் “காணொலிப்_போட்டி #1”

பெரியார் வலைக்காட்சி நேயர்களே…

பகுத்தறிவு,சமூகநீதிச் சிந்தனையுடையோரை ஊக்கப்படுத்தும் வகையில் பெரியார் வலைக்காட்சி தொடர்ந்து போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையிலான முதல் போட்டிக்கான அறிவிப்பு இது.

கடுமையான இந்த கொரோனாவை ஒழிக்க, அறிவியல் அரும்பாடுபட்டுவரும் இந்தக் காலத்திலும், மூடநம்பிக்கையைப் பரப்பும் விதத்தில் கொரோனாவை வைத்துப் பிழைப்பு நடத்தும் மதவாதிகளையும், ஜோதிடர்களையும், யாகம் நடத்தி கொரோனாவை ஒழிக்கிறோம் என்று கிளம்பும் பார்ப்பனர்களையும் தோலுரித்து, மக்களுக்கு எளிமையாக செய்திகளை எடுத்துச் சொல்லும் காணொலிக்கான போட்டி இது!

தலைப்பு: #கரோனாவிலும்_மத_வணிகமா?

1. பகுத்தறிவின் பாற்பட்டு கேள்வி எழுப்பலாம். பேச்சு / கவிதை வாசிப்பு / நடிப்பு / குறு நாடகம் எவ் வடிவிலும் இருக்கலாம்.

2. மதவாதிகளின் சுயநல நோக்கத்தை அம்பலப்படுத்தலாம்.

3. (அ) ஆபாசமான வார்த்தைகளையோ, அருவெறுப்பான செய்கைகளையோ வெளிப்படுத்தக் கூடாது.

(ஆ) கரோனா ஊரடங்கு கால கட்டுப்பாடுகளையும், சமூக இடைவெளியையும் மீறாமல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. எவ் வயதினரும் பங்கேற்கலாம்.

5. காணொலிகள் அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்கு மிகக் கூடாது.

6. பங்கேற்பாளரின் பெயர், ஊர், முதன்மைச் செல்பேசி எண்ணையும் காணொலியின் தொடக்கத்தில் குறிப்பிட்டு, 3 நொடி இடைவெளிவிட்டு பேச்சை/நடிப்பைத் தொடங்க வேண்டும். (இது மேற்சொன்ன மூன்று நிமிட கால அளவில் சேராது. அதாவது அறிமுகம் + 3 நிமிடங்கள்)

7. போட்டியாளரின் செல்பேசி எண், போட்டிக்காக வெளியிடப்படும் காணொலியில் வெளியிடப்படாது.

8. பதிவு செய்யப்பட்ட காணொலியை ”#கரோனாவிலும்_மத_வணிகமா? – #காணொலிப் போட்டி #1” என்று குறிப்பிட்டு, அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 8124152222.

* காணொலிக் கோப்புகளாக (video) இந்த வாட்ஸ் அப்- எண்ணுக்கு வரும் காணொலிகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஏப்ரல் 10, 2020

9. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் காணொலிகள் periyartv-இன் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு, நேயர்களின் தேர்வுக்கு முன்வைக்கப்படும். (விருப்பம் – 3 புள்ளிகள்; பகிர்வு – 5 புள்ளிகள்)

அதிக நேயர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவர்.

அதன் முடிவில் அடுத்த போட்டிக்கான தலைப்பு அறிவிக்கப்படும்.

10. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ.500, ரூ.300, ரூ.200 மதிப்பிலான புத்தகங்கள் பரிசளிக்கப்படும். வெற்றி பெற்ற காணொலிகள் பெரியார் வலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும்.

#பொறுப்புத்_துறப்பு:

அ. போட்டி முடிவுகள் வெளிவரும் வரை, போட்டியாளர்கள் தங்கள் காணொலிகளைத் தங்கள் பக்கத்திலோ, பிறரின் பக்கத்திலோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட வேறு சமூக ஊடகங்களிலோ வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிடப்பட்டிருப்பது தெரிய வருமாயின், அக் காணொலிகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.

ஆ. பெரியார் வலைக்காட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும் காணொலிகளுக்கு மட்டுமே பெரியார் வலைக்காட்சி பொறுப்பேற்கும். இப் போட்டியில் பங்கேற்பதற்காக எடுக்கப்பட்ட காணொலிகள் ஆயினும், பெரியார் வலைக்காட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்படாத எந்த காணொலிக்கும் பெரியார் வலைக்காட்சி பொறுப்பேற்காது.

மேலும் விவரங்கள், புதிய தகவல்களுக்கு PeriyarTV-இன் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்!

மூடநம்பிக்கைகளைத் தகர்ப்போம்!
பகுத்தறிவுச் சமுதாயம் படைப்போம்!!

– பெரியார் வலைக்காட்சி

#PeriyarTV_Contest
#பெரியார்_வலைக்காட்சி_காணொலிப்_போட்டி

Add your comment

Your email address will not be published.