மாநிலப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கான அலுவல் ரீதியான பணிகள்.
பதிவேடுகள்:
1. தங்களுக்குச் சம்பந்தப்பட்ட பகுதிகளில், பொறுப்பாளர்களின் முகவரிகள் – தொலைப் பேசி எண்கள் – பதிவேடு.
2. பல்வேறு கட்சிகளின், அமைப்புகளின் பொறுப்பாளர்களின் முகவரிகள், தொலைப் பேசி எண்கள் – பதிவேடு.
3. கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டங்களுக்கான மினிட் புத்தகம்.
4. வரவு – செலவு நோட்.
5. கடிதத் தொடர்பான கோப்பு.
6. கழகம் நடத்திய நிகழ்ச்சிகள்பற்றிய துண்டறிக்கைகள் – தகவல்களுக்கான கோப்பு.
7. கழக உறுப்பினர்கள் – முகவரிகள் – தொலைப்பேசி எண்கள்.
8. ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ சந்தாதாரர்கள்பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவேடு – எப்பொழுது சந்தா முடிவடைகிறது என்ற விவரம்.
9. தங்கள் பகுதிகளில் உள்ள பெரியார் படிப் பகம் – நூலகங்களின் செயல்பாடுகள் – பரா மரித்தல் – மேற்பார்வையிடுதல் – ஒழுங்கு படுத்துதல்.
10. ஓர் ஆண்டுக்கான பிரச்சாரத் திட்டம் வகுத்தல் – செயலாக்குதல்.
11. கரும் பலகைமூலம் அன்றாடம் பகுத் தறிவுக் கருத்துகள் – தகவல்கள் எழுதுதல்.
12. உறுப்பினர் சேர்க்கை
13. மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, தொழிலாளர் அணியை வலுப்படுத்துதல்.
14. பெரியார் ஆயிரம் நடத்துதல்
15. பகுத்தறிவாளர் கழகத்தோடு இணைந்து செயலாற்ற வேண்டிய பணிகள்.
16. தங்கள் பகுதிகளில் உள்ள விடுதிகள் – மாணவர்களோடு நெருக்கமான தொடர்பு – கலந்துரையாடல்கள். உள்ளூர் இளைஞர்களை இயக்கத்தின்பால் ஈர்த்தல்.
17. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை ‘‘பெரியார் பேசுகிறார்” அல்லது வாசகர் வட்டம் நிகழ்ச்சி.
18. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்.
19. சிறுசிறு நூல்களை மாணவர்கள், இளை ஞர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தல்.
20. துண்டறிக்கைகள் விநியோகம்.
21. தங்கள் பகுதிகளில் சேவை மனப்பான்மை யுடன் பொதுமக்களுக்கு உதவுதல், அவசர – அவசிய காலத்தில் முந்தி சென்று உதவுதல்.
பொதுமக்களிடம் தொண்டு, நன்னடத்தை மூலம் தோழர்கள் பெறும் நன் மதிப்பு – இயக்கத்திற்கும் பயன் விளைவிக்கும்.
இப்பொழுது நல்ல அவகாசம் கிடைத் திருக்கிறது.
இந்த வகையில் மேலும் செழுமையான யோசனைகளைத் தெரிவிக்கலாம், செயல் படலாம்.
களப் பணிக்கு இப்பொழுது வாய்ப்பு இல்லை; எனினும் கழகத் தோழர்களோடு அலைபேசிமூலம் தொடர்பைத் தொடருங்கள்.
கரோனா தொடர்பான தகவல்களை அறிந்து தேவையான வழிகாட்டுதல் பணிகளைச் செய்து வாருங்கள்.
மற்றொன்று மிகமிக முக்கியம்:
நூல்களைப் படிக்க அவகாசம் கிடைத்தி ருக்கிறது. இயக்க நூல்களை குறிப்பாக தந்தை பெரியார் நூல்களை கட்டாயம் படிக்கவேண்டும். சமூக வலைதளம் மூலம் கருத்துகளைப் பரப்புங்கள்.
இளைஞர்கள் வீடுகளில் முடங்கிக் கிடப் பார்கள் – அவர்களிடத்திலும் சிறுசிறு நூல் களைக் கொடுத்துப் படிக்கும் வாய்ப்பை உருவாக்குங்கள்.
குடும்பத்தாருடன் அதிக நேரம் செல வழிக்கும் காலகட்டம் இது. இயக்க உரை யாடல்கள் இடம்பெறட்டும். பிள்ளைகளின் உளவியல் அறிந்து பகுத்தறிவு கருத்துகளை நயமாகக் கூறி வழிகாட்டுங்கள். குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளின் எதிர்காலம், பொருளாதாரப் பிரச்சினைகள்பற்றி கலந்து பேசி திட்டமிடுங்கள்!
எந்த ஒரு சூழ்நிலையையும் பயனுள்ளதாக மாற்றி அமைப்பதுதான் பகுத்தறிவாகும்.
மாபெரும் சமூகப் புரட்சி இயக்கத்தின் போர் வீரர்கள் நாம்!
ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக் குவோம்! உடல்நலனையும் பேணுங்கள்!
விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம் இது!
அன்புடன்,
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.3.2020