வணக்கம் பெரியார் வலைக்காட்சி நேயர்களே,
“#கரோனாவிலும்_மத_வணிகமா?” என்னும் தலைப்பில் நடைபெற்ற முதல் காணொலிப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
வாசகர்களின் விருப்பம், பகிர்வின் அடிப்படையில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். எனினும் ஆர்வமிகுதியில் ஒரு சிலரே அதிகப் பகிர்வு செய்திருப்பதால், அதிலிருந்து தனிப் பகிர்வுகளைக் (Unique Shares) கணக்கிடுவதில் கடினமாகிறது.
எனவே, முழுக்க ‘விருப்பம் (Like)’ தெரிவித்த நேயர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
அடுத்தடுத்த போட்டிகளிலும், விருப்பம் (Like), அன்பு (Love), அதிகப் பார்வைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசு அறிவிக்கப்படும்.
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.
#முதல்பரிசு
118 விருப்பங்களுடன் கவிஞர் உத்தமன் இயக்கிய கொரோனா குறும்படம் (https://www.facebook.com/Periyartv/videos/244237596701369/) முதல் பரிசைப் பெறுகிறது.
#இரண்டாம்பரிசு
111 விருப்பங்களுடன் தோழர் பூவிழி தென்றல் (https://www.facebook.com/394081857315617/videos/150537719727030/) இரண்டாம் பரிசைப் பெறுகிறார்.
#மூன்றாம்பரிசு
101 விருப்பங்கள் பெற்று மூன்றாம் பரிசை தோழர்கள் சக்ரவர்த்தி அன்புச்செல்வி (https://www.facebook.com/394081857315617/videos/160018445323109/) & ம.ஜெ.சந்தீப் (https://www.facebook.com/394081857315617/videos/533354320948673/) ஆகியோரின் இரு போட்டிக் காணொலிகள் பகிர்ந்து கொள்கின்றன.
#சிறப்புப்பரிசு
அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற தோழர் சங்கநிதிக்கு (https://www.facebook.com/Periyartv/videos/668653607254056/) சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது.
இத் தோழர்களின் முகவரிக்கு அவர்களுக்குரிய பரிசுகள் ஊரடங்கு காலத்திற்குப் பிறகு அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த போட்டி அறிவிப்பு நாளை!
காத்திருங்கள்!
– பெரியார் வலைக்காட்சி